செப்டம்பர் month vegetable cultivation
செப்டம்பர் மாதத்தில் காய்கறிப் பயிர் மற்றும் பந்தல் விவசாயம் செய்வோர் செய்ய வேண்டியவை 1) பெரும்பாலான பகுதிகளில் காய்கறிகள் நடவு செய்து அது வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் மாதத்தை பொருத்தவரையில் தரைவழி அதிக ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது மிகவும் சிறந்தது. எதிர்வரும் மழைக்காலத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஏக்கருக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் தருவதாக இருந்தால் ஒரு வாரம் 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது அரை லிட்டர் மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது ஒரு லிட்டர் பஞ்சகாவியா தரைவழி ஒவ்வொரு பாசனத்துடனும் தரலாம். 2) 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை இடுபொருட்களை இலைகளின் மேல் தெளிப்பது நல்ல பலன் தரும். 10 லிட்டருக்கு 200-300 மில்லி என்ற அளவில் பஞ்சகவியா அல்லது ஈயம் கரைசலை தெளிப்பது நல்லது. மீன் அமிலம் 75 மில்லி கலந்து கொடுப்பது நல்லது. 3) எருக்கு கரைசல் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தருவது நல்லது. அதனை 15 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டராக பிரித்து கொடுக்கலாம். தெறி பிற்கு 8 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் கரைசலை கலந்து தெளிக்கலாம். 4)ஒரு ஏக்கர் வய...