Todays butterfly இன்று ஒரு வண்ணத்துப்பூச்சி

 வணக்கம் நண்பர்களே 🙏🏻


இன்னிக்கு நாம 'வரியன்கள்(Brush-footed butterflies)' குடும்பத்தில் இருந்து ஒரு நண்பர பாக்கலாம். இவர் பெயர் 'வெண்புள்ளிக் கருப்பன் (Common Crow)'


இவரும் நம்ம நண்பர் 'வெந்தய வரியன (Plain Tiger)' போல புழு பருவத்தில் நச்சு தன்மை உள்ள இலைகளை உண்பதால் மற்ற உயிரினங்களுக்கு பெரும்பாலும் இரையாவதில்லை.


இதுக்காகவே 'பெரிய பசலைச் சிறகன்ல' பெண் வண்ணத்துப்பூச்சிகள் (Great Eggfly Female) இவரை போல் ஒப்பு போலி (Mimic) செய்றாங்க. இதனால் இருவருமே மற்ற உயிரினங்களின் ஆபத்திலிருந்து பெரும்பாலும் தப்பித்துவிடுகிறார். 


சில சமயங்களில் ஆச்சரியமான விஷயங்களும் நடந்துவிடுகிறது, வெவ்வேறு வண்ணத்துப்பூச்சிகள் இடையே ஒப்புபோலி(mimic)செய்வதால் அவைகள் எப்போதாவது மாற்றி இணை சேர்ந்துவிடுகின்றன. இதனால் எந்த பயனும் மற்றும் ஆபத்தும் இல்லை என்று வண்ணத்துப்பூச்சி அறிஞர்கள் கூறுகின்றனர்!!!


பெண் வெண்புள்ளிக் கருப்பன் (Common Crow Femal) முட்டையிட பெரும்பாலும் புதிதாக துளிர் விட்ட அரளி செடி (Oleander) போன்ற நச்சுத்தன்மை  உள்ள இலைகளின் அடிப்பாகத்தையே தேர்வு செய்கின்றன.


இவர் ஈர மண்ணில் நீர் உறிஞ்சுவார். சில சமயம் 'நீல வரியன் (Blue Tiger), கருநீல வரியன் (Dark Blue Tiger), ஆரஞ்சு வரியனுடன் (Striped Tiger)' இவைகள் எல்லாம் சேர்ந்து தேள் கொடுக்கு (Scorpion Weed) என்கிற செடியில் ஆண் வண்ணத்துப்பூச்சிகள் மட்டும் தாதுக்களை கூட்டமாக  உறிஞ்சுவதை காணலாம்.

 

இயற்கை அழகானது என்பதற்கு ' வெண்புள்ளிக் கருப்பனின்'( Common Crow ) கூட்டுப்புழு ( Pupa) ஒரு எடுத்துக்காட்டு😍. இதை நான் வர்ணித்து நீங்கள் கேட்பதை விட நீங்களே சென்று தேடி ரசித்து மகிழுங்கள். நன்றி!!!


#_இன்று_ஒரு_வண்ணத்துப்பூச்சி...


Comments

Popular posts from this blog

நிலக்கடலை pea nut groundnut is life saver hidden truth behind peanut

சிரிப்பு immunity தரும்

Lonely lullaby