செப்டம்பர் விவசாயம் மாமரம்

 செப்டம்பர் மாதத்தில் மாம்பழங்களுக்கு செய்ய வேண்டியவை


1)மா மரத்தில் பூ பூக்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தை பொருத்தவரையில் தரைவழி அதிக ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது மிகவும் சிறந்தது. எதிர்வரும் மழைக்காலத்தை அடிப்படையாக வைத்து ஒரு மரத்திற்கு வாரம் ஒரு முறை தண்ணீர் தருவதாக இருந்தால் ஒரு வாரம் 3 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 25 மில்லி மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவியா தரைவழி ஒவ்வொரு பாசனத்துடனும் தரலாம்.

2) முடிந்தவரை தெளிப்பு குறைத்துக்கொள்வது நல்லது. மானாவாரி மா சாகுபடியில் 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் பஞ்சகவியா அல்லது ஈயம் கரைசலை தெளிப்பது நல்லது.

3)  எருக்கு கரைசல் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் தருவது நல்லது அதனை 15 நாட்களுக்கு ஒரு முறை தரலாம். 4)ஒரு ஏக்கர் வயலில் குறைந்தபட்சம் இரண்டு எண்கள் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் ஒன்பதரை மணிவரை இயக்குவது நல்லது.

 5) பழ ஈகளுக்கான பொறிகளை ஏக்கருக்கு 7 எண்ணிக்கையில் கட்டி பாதி மரத்தில் கட்டி தொங்க விடுவது நல்லது 

6)குறைந்த அளவு தண்ணீரை சமமான இடைவெளியில் கொடுப்பது நல்லது.

 7)மரத்தில் நோய்வாய்ப்பட்ட தன்மை தென்பட்டால் அல்லது பூச்சித் தாக்கம் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.



Comments

Popular posts from this blog

நிலக்கடலை pea nut groundnut is life saver hidden truth behind peanut

சிரிப்பு immunity தரும்

Lonely lullaby