Dont prefer seedless ..reason follows
*" விதையில்லா பழங்களை உண்பவர்கள் விதை இல்லாமல் போவார்கள் "* *என்றார் நம்முடைய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா அவர்கள்.*
*அதாவது ,*
*" சந்ததி இல்லாமல் போவார்கள் "*
*என்றார் .*
*குழந்தை பெற்ற பிறகு ஒரு பெண் முழுமையான பெண்ணாகிறாள். அதைப்போல , ஒரு செடியில் விதை உருவான பிறகுதான் அது முழுமை அடைகிறது என்கிறது தாவர அறிவியல். பழத்திலும் , காயிலும் இருக்கிற விதைகளுக்குள் பல மருத்துவ அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன . நம் உடலின் உன்னத வளர்ச்சிக்கான பைட்டோ கெமிக்கல்ஸ் (Phyto Chemicals) என்னும் வேதிப் பொருட்கள் விதைகளுக்குள் கொட்டிக்கிடக்கின்றன.*
*சித்தர்கள் காய் , கனிகளைத் தாண்டி விதைகளின் உன்னதத்தையும் அறிந்து வைத்திருந்தார்கள். " அத்திப் பழமும் , அரைக்கீரை நல் வித்தும் " என்று தொடங்குகிற திருமூலர் பாடலில் அத்தி பழ விதைகளை பெண்ணின் கருமுட்டைக்கு ஒப்பாகவும் , அரைக் கீரையின் விதைகளை விந்தணுவிற்கு இணையாகவும் ஒப்பிடுகிறார்.*
*செல் பிரிதலில் மைட்டாசிஸ், மியாசிஸ் நிலைகளை சின்ன வயசுல பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். விதைகள் இல்லாத பழங்களை உருவாக்க இந்த செல் பிரிதல் நிலையில் செயற்கையான சில மாற்றங்களை செய்கிறார்கள். இப்படி பழங்களை விதையற்று உருவாக்கும் முறைக்கு Parthenocarpy 'ன்னு சொல்றாங்க.*
*இப்படி மாற்றப்பட்டு வருகிற பழங்களால் அடுத்து அதே போல இன்னொரு பழமரத்தை ஏற்படுத்த முடியாது. அந்த பழத்தை நாம் சாப்பிடும் போது நமக்குள் ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கிறது. குறிப்பாக இனப்பெருக்க ஹார்மோன்களான. "ஈஸ்ரஜன்" , புரோஜெஸ்ட்ரான் " ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு "மலட்டுத்தன்மை" வரும் வாய்ப்புகள் அதிகம். வருடக் கணக்கில் இதை சாப்பிடும்போது மரபணு சார்ந்த கோளாறுகளும் வரலாம் என்கிறது சமீபத்திய நவீன ஆராய்ச்சி.*
*இது தவிர ஒவ்வொரு விதைக்கும் குறிப்பிட்ட சில மருத்துவ குணங்கள் உண்டு. குறிப்பாக அனைத்து விதைகளும் நம் இனப்பெருக்க நடவடிக்கைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அமிலத் தன்மையுடன் இருக்கும் நம் உடம்பை காரத்தன்மைக்கு மாற்றும் தன்மை விதைகளுக்கு உண்டு.*
*யோக நெறிகளோடு இருக்க , இருக்க உடலில் காரத்தன்மை கூடும். அதனால் நம் உடல் சாகா வரம் பெறும். அதற்கு சித்தர்கள் சிலவற்றை நீக்கி சிலவற்றை சேர்க்க சொன்னார்கள். அப்படி சேர்க்கச் சொன்னதில் ஒன்று விதையுள்ள கனிகள்.*
*தோல் , சதை , விதை மூன்றும் சேர்ந்ததே பழம் . விதைகளில் நார்ச் சத்து உண்டு. பழத்தில் இனிப்பின் அளவு , நம் உடம்பின் சர்க்கரை அளவை சமநிலை படுத்துவதற்காகவே. கசப்பின் சுவைகூட விதைகளில் உண்டு .*
*Bowel Movement என்று சொல்லப்படும் குடலின் மலமிளக்கும் தன்மையை பழங்களில் உள்ள விதைகளே அதிகப்படுத்துகின்றன. சீட்லெஸ் பழத்தை சாப்பிடும் போது இந்த நன்மையெல்லாம் நமக்கு கிடைக்காது .*
*நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி பண்ண பழங்களின் விதைகள் உதவியாக இருக்கிறது . திராட்சை விதைகளை பொடியாக்கி தரும்போது கேன்சர் செல்லின் வளர்ச்சி கட்டுக்குள் வருவதை கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் நரம்பு முறுக்கேற தாம்பத்தியத்தில் நல்ல பலனை தரும். திருப்தி தரும் .*
*பழத்தில் உள்ள விதைகளை நீக்கும் போது நரம்புகளுக்கு கிடைக்கக்கூடிய வலு கிடைக்காமல் போய்விடும் . திராட்சை விதையில் கேன்சரை எதிர்த்து செயல்பட கூடிய "பைட்டோ கெமிக்கல்ஸ்" இருக்கிறது. இதன் விதைகளை பொடியாக்கி தரும்போது கேன்சர் செல்லின் வளர்ச்சியை கட்டுக்குள் வருவதை கண்டறிந்திருக்கிறார்கள். தவிர இந்த விதையை சாப்பிடும் போது இதயத் தசைகள் , இரத்த நாளங்கள் வலுவாகும்.*
*மாதுளை விதையில் உள்ள துவர்ப்புச்சுவை பெண்களின் கருப்பை சிக்கலுக்கு சர்வரோக நிவாரணி . ஆண்களின் நீர்த்துப்போன விந்துவையும் இது கெட்டிப்படுத்தும் .*
*ஆப்பிளில் உள்ள விதைகள் பெண்களுக்கான ஈஸ்ரஜன் ஹார்மோன் சுரப்பதை தூண்டுகிறது. பழத்துடன் விதைகளைச் சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சீராகும் . மெனோபாஸ் வருவது தாமதமாகும். ஆப்பிள் விதை ஒரு நல்ல "ஆன்டிஆக்சிடென்ட்" . ஆன்டி கேன்சர் ஏஜெண்ட் கூட இதில் இருக்கிறது.*
*வெள்ளரி விதை சிறுநீரகப் பாதை நோய்த் தொற்றுக்கு சிறந்த மருந்து. உடலில் உள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றும். முக்கியமாக விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டி தரும். முருங்கை , அரைக்கீரை , ஆமணக்கு , எள் மற்றும் வேப்பம் விதைகள் என பல கனி , காய்களின் விதைகள் சிறந்த மருந்தாக செயல்படுகிறது .*
*நாட்டு வாழை பழத்தின் நடுவில் கருப்பாய் விதைகள் இருக்கும். சற்று துவர்ப்பாக இருக்கும். இது உடலுறவு சமயத்தில் மன எழுச்சியை , உற்சாகத்தை தரும் . இதிலுள்ள செலினியம் , மாலிட்டினம் , துத்தநாகம் , மாங்கனீசு , கால்சியம் உள்ளிட்ட நுண்ணூட்டங்கள் அந்த நேரத்திற்கு தேவையானது. ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய ரக பெங்களூர் வாழைபழத்தின் நடுவே இந்த விதைகள் இருக்காது .*
*வெண்டைக்காய் விதை நன்றாகவே வீரியத்தைக் கூட்டும். பூசணி விதையில் பொட்டாசியம் , இரும்பு , வைட்டமின் பி , புரதச் சத்து இருக்கிறது . இந்த விதை நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் . குடல் பிரச்சனையை சரிசெய்யும் .*
*சத்து நிறைந்த சிறுதானியங்கள் அனைத்துமே விதை இனங்களை சேர்ந்தவை தான். தமிழகத்து நிலப்பரப்பிற்கான சரியான உணவு வகைகளே இந்த சிறுதானியங்கள் தான். தேங்காய்கூட விதை வகையை. இதன் நல்ல கொழுப்பு புரதங்கள் உடலுக்கு மிக மிகத் தேவையானது.*
*மரபணு நீக்கப்பட்ட சீட்லெஸ் பழங்களை சாப்பிடும் போது நமக்கு பிரச்சினை கொடுக்கவே செய்யும்.*
*" Genetically Modified " செய்யப்பட்டு விதை நீக்கம் செய்யப்பட்ட காய், கனிகளை அறவே தவிர்த்திடுங்கள்.*
******************
Comments
Post a Comment