நம் மருத்துவம் மறந்தோம்!Tamil words extracts medicine!

 #வெப்பம்+இல்லை 

#வேப்பிலை!

உடல் வெப்பத்தை

இல்லையென்றாக்கும் வேப்பிலை!


#கரு+வெப்பம்+இல்லை #கருவேப்பிலை!

கருப்பை வெப்பத்தை

இல்லையென்றாக்கும் கருவேப்பிலை!


#அகம்+தீ−

#அகத்தீ .உடலின் உள்ளே

அகத்தின் தீயைக் குறைக்கும் அகத்தி!


#சீர்+அகம்−

#சீரகம்

அகத்தின் சூட்டைச் சீராக்கும் சீரகம்!


#காயமே இது பொய்யடா−வெறும்

காற்றடைத்த பையடா!

காயத்தின் காற்றை

வெளியேற்றும் 

#பெருங்காயம்!


#வெம்மை+காயம்−

#வெங்காயம்

உடலின் வெம்மையைப்

போக்கும் வெங்காயம்!


#பொன்+ஆம்+காண்+நீ

#பொன்னாங்கண்ணி!

உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ!


#கரிசல்+ஆம்+காண்+நீ

#கரிசலாங்கண்ணி காய்ச்சிய

எண்ணெய் கூந்தலைக் கரிசலாக்கும்

காண் நீ!


#சொற்களுக்குள்ளே

மருத்துவம் வைத்தான்!

நம் மகத்தான பாட்டன்!


#தமிழ்ச்சொற்களை மறந்தோம்!

நம் மருத்துவம் மறந்தோம்!


#சொன்ன பாட்டியை மறந்தோம்!

பாட்டனை மறந்தோம்!


#நாள்தோறும் நமது வரலாற்று மற்றும் ஆரோக்கியம் 


#ஆரோக்கியமான தகவல்கள் எப்போதும் மகிழ்வித்து மகிழ்....!!!!.

Comments

Popular posts from this blog

நிலக்கடலை pea nut groundnut is life saver hidden truth behind peanut

சிரிப்பு immunity தரும்

Lonely lullaby