Posts

செப்டம்பர் month vegetable cultivation

 செப்டம்பர் மாதத்தில் காய்கறிப் பயிர் மற்றும் பந்தல் விவசாயம் செய்வோர் செய்ய வேண்டியவை 1) பெரும்பாலான பகுதிகளில் காய்கறிகள் நடவு செய்து அது வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் மாதத்தை பொருத்தவரையில் தரைவழி அதிக ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது மிகவும் சிறந்தது. எதிர்வரும் மழைக்காலத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஏக்கருக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் தருவதாக இருந்தால் ஒரு வாரம் 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது அரை லிட்டர்  மீன் அமிலம் அல்லது  இஎம் கரைசல் அல்லது ஒரு லிட்டர் பஞ்சகாவியா தரைவழி ஒவ்வொரு பாசனத்துடனும் தரலாம். 2) 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை இடுபொருட்களை இலைகளின் மேல் தெளிப்பது நல்ல பலன் தரும். 10 லிட்டருக்கு 200-300 மில்லி என்ற அளவில் பஞ்சகவியா அல்லது ஈயம் கரைசலை தெளிப்பது நல்லது. மீன் அமிலம் 75 மில்லி கலந்து கொடுப்பது நல்லது. 3)  எருக்கு கரைசல் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தருவது நல்லது. அதனை 15 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டராக பிரித்து கொடுக்கலாம். தெறி பிற்கு 8 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் கரைசலை கலந்து தெளிக்கலாம். 4)ஒரு ஏக்கர் வய...

செப்டம்பர் விவசாயம் மாமரம்

 செப்டம்பர் மாதத்தில் மாம்பழங்களுக்கு செய்ய வேண்டியவை 1)மா மரத்தில் பூ பூக்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தை பொருத்தவரையில் தரைவழி அதிக ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது மிகவும் சிறந்தது. எதிர்வரும் மழைக்காலத்தை அடிப்படையாக வைத்து ஒரு மரத்திற்கு வாரம் ஒரு முறை தண்ணீர் தருவதாக இருந்தால் ஒரு வாரம் 3 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 25 மில்லி மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவியா தரைவழி ஒவ்வொரு பாசனத்துடனும் தரலாம். 2) முடிந்தவரை தெளிப்பு குறைத்துக்கொள்வது நல்லது. மானாவாரி மா சாகுபடியில் 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் பஞ்சகவியா அல்லது ஈயம் கரைசலை தெளிப்பது நல்லது. 3)  எருக்கு கரைசல் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் தருவது நல்லது அதனை 15 நாட்களுக்கு ஒரு முறை தரலாம். 4)ஒரு ஏக்கர் வயலில் குறைந்தபட்சம் இரண்டு எண்கள் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் ஒன்பதரை மணிவரை இயக்குவது நல்லது.  5) பழ ஈகளுக்கான பொறிகளை ஏக்கருக்கு 7 எண்ணிக்கையில் கட்டி பாதி மரத்தில் கட்டி தொங்க விடுவது நல்லது  6)குறைந்த அளவு தண்ணீரை சமமான இடைவெளியில் கொடுப்பது நல...

தேனும் நாமும் honey benefits

 இயற்கையாக கிடைக்கப்பெற்ற மலைத்தேன் மற்றும் கொம்புத்தேனின் மருத்துவ குணங்கள் : தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.  70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான். மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம்  இருப்பதால்,  மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது..  1.விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.  2.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும். 3.கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும். 4.இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை...

Todays butterfly இன்று ஒரு வண்ணத்துப்பூச்சி

Image
 வணக்கம் நண்பர்களே 🙏🏻 இன்னிக்கு நாம 'வரியன்கள்(Brush-footed butterflies)' குடும்பத்தில் இருந்து ஒரு நண்பர பாக்கலாம். இவர் பெயர் 'வெண்புள்ளிக் கருப்பன் (Common Crow)' இவரும் நம்ம நண்பர் 'வெந்தய வரியன (Plain Tiger)' போல புழு பருவத்தில் நச்சு தன்மை உள்ள இலைகளை உண்பதால் மற்ற உயிரினங்களுக்கு பெரும்பாலும் இரையாவதில்லை. இதுக்காகவே 'பெரிய பசலைச் சிறகன்ல' பெண் வண்ணத்துப்பூச்சிகள் (Great Eggfly Female) இவரை போல் ஒப்பு போலி (Mimic) செய்றாங்க. இதனால் இருவருமே மற்ற உயிரினங்களின் ஆபத்திலிருந்து பெரும்பாலும் தப்பித்துவிடுகிறார்.  சில சமயங்களில் ஆச்சரியமான விஷயங்களும் நடந்துவிடுகிறது, வெவ்வேறு வண்ணத்துப்பூச்சிகள் இடையே ஒப்புபோலி(mimic)செய்வதால் அவைகள் எப்போதாவது மாற்றி இணை சேர்ந்துவிடுகின்றன. இதனால் எந்த பயனும் மற்றும் ஆபத்தும் இல்லை என்று வண்ணத்துப்பூச்சி அறிஞர்கள் கூறுகின்றனர்!!! பெண் வெண்புள்ளிக் கருப்பன் (Common Crow Femal) முட்டையிட பெரும்பாலும் புதிதாக துளிர் விட்ட அரளி செடி (Oleander) போன்ற நச்சுத்தன்மை  உள்ள இலைகளின் அடிப்பாகத்தையே தேர்வு செய்கின்றன. இவர் ஈர ம...

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ......

Oct 2020 டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் ஒரு மிக முக்கிய செய்தி ... தமிழ்நாட்டு விவசாய பூமி முழுதும்‌ கிட்டத்தட்ட மலடாகிவிட்டது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியுட்டுள்ள ஆய்வறிக்கை பற்றிய செய்திதான்‌ அது. எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற அறிவியல் அரக்கர்களின்‌ பேச்சைக்கேட்டு பசுமைப் புரட்சி என்ற போர்வையில், அளவுக்கு அதிகமா வேதி உப்புகளையும், விசத்தையும் மண்ணில் தூவியதன் விளைவு இன்று நமக்கு பசியாற உணவு தந்த தாய்மண் மலடாகிக் கிடக்கிறது. இயற்கை உரங்களான ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளின் சாணம், இலை தழைகளின் மக்கிய உரம் ஆகியவற்றைப் புறந்தள்ளி வேதி உப்புகளை உரம் என்ற பெயரால் மண்ணில்‌ கொட்டினோம். வேப்பெண்ணை, வேப்பம் புண்ணாக்கு போன்ற பூச்சித் தடுப்பான்களை விடுத்து உயிர்க்கொல்லி மருந்துகளை செடிகளிலும் மண்ணிலும்‌ கொட்டினோம். விளைவு நமது மண் தனது உயிர் ஆதாரத்தை இழந்து மலடாகிவிட்டது. தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, சேலம், இராமநாதபுரம் ஆகியநான்கு மாவட்டங்கள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மண்ணின் வளமானது முற்றாக சிதைந்துவிட்டது என அந்த அறிக்கை கூறுகிறது. மண்ணுக்கு உயிராக விளங்குவது அதில் அடங்கிய...

என்ன நல்லது எது நலம்

 குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத...

Dont prefer seedless ..reason follows

 *" விதையில்லா பழங்களை உண்பவர்கள் விதை இல்லாமல் போவார்கள் "*  *என்றார்  நம்முடைய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா அவர்கள்.*                    *அதாவது ,*      *" சந்ததி இல்லாமல் போவார்கள் "* *என்றார் .*              *குழந்தை பெற்ற பிறகு ஒரு பெண் முழுமையான பெண்ணாகிறாள். அதைப்போல , ஒரு செடியில் விதை உருவான பிறகுதான் அது முழுமை அடைகிறது என்கிறது தாவர அறிவியல். பழத்திலும் , காயிலும்  இருக்கிற விதைகளுக்குள்  பல மருத்துவ அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன . நம் உடலின் உன்னத வளர்ச்சிக்கான பைட்டோ கெமிக்கல்ஸ் (Phyto Chemicals) என்னும் வேதிப் பொருட்கள் விதைகளுக்குள் கொட்டிக்கிடக்கின்றன.*                    *சித்தர்கள் காய் , கனிகளைத் தாண்டி விதைகளின் உன்னதத்தையும் அறிந்து வைத்திருந்தார்கள். " அத்திப் பழமும் , அரைக்கீரை நல் வித்தும் "  என்று தொடங்குகிற திருமூலர் பாடலில் அத்தி பழ விதைகளை பெண்ணின் கருமுட்டைக்கு ஒப்பாகவும் , ...